உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலமேட்டில் குறையும் மொச்சை சாகுபடி

பாலமேட்டில் குறையும் மொச்சை சாகுபடி

பாலமேடு : பாலமேடு பகுதி கிராமங்களில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்தில் அதிகளவில் நடந்த மொச்சை சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.இப்பகுதியில் ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் மொச்சை பயிரிடப்படும். கடந்த ஆண்டு விளைச்சல் சரியில்லை. இந்த ஆண்டும் பருவம் தவறி பனி, மழை, வெயில் என மாறி மாறி வந்து விளைச்சல் தாமதமாவதால் மகசூல் குறையும். ஆடியில் விதைத்து 4 மாதத்தில் விளைய வேண்டிய பயிர் இன்னும் விளையாமல் உள்ளது. 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வந்த மொச்சை தற்போது 50 ஏக்கராக குறைந்துள்ளது.சின்ன பாலமேடு விவசாயி சுரேந்திரன்: கடந்தாண்டு மகசூல் குறைந்ததால் மொச்சை விலை கூடியது. வீட்டில் இருந்த விதைகளை வைத்து குறைந்தளவு பயிரிட்டுள்ளேன்.மானாவாரி செடியில் பூக்கள் உதிர்வு, பூச்சி தாக்குதலால் விவசாயிகள் அதிகம் பாதித்துள்ளனர். எனக்கு கிணற்று பாசனம் உள்ளதால் பாதிப்பு குறைவு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ