உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அன்னையர் தினம் கொண்டாட்டம்

அன்னையர் தினம் கொண்டாட்டம்

மதுரை: மதுரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, டி.வி.எஸ்., ஆரோக்கியா நலவாழ்வு அறக்கட்டளை, அன்பகம் சிறப்புப் பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளிகளின் அம்மாக்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு அன்னையர் தினம் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார்.மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு தொழில் துவங்க ஏதுவாக தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கு வீல்சேர், சிறப்பு இருக்கைகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் பெற்றோர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் தமிழரசி, சமூகநல அலுவலர் காந்திமதி, அங்கன்வாடி திட்ட அலுவலர் ஷீலாசுந்தரி, திட்ட அலுவலர்கள் ஜான்டேவிட், முத்துராமன், சிறப்புப் பள்ளிச் செயலாளர் மரியம்மாள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை