மேலும் செய்திகள்
மாணவர்களின் திறனை வளர்க்க தொழில்துறை படிப்புகள்
10-Nov-2024
மதுரை: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) மாணவர்களின் திறன், வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்லுாரியின் ஸ்கூல் ஆப் அனிமேஷன் அன்ட் மீடியா ஸ்டடீஸ் - திருவனந்தபுரம் டாட்ஸி பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு பங்கேற்றார். நிகழ்ச்சியில் முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குரு பாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர் கி ேஷார்குமார், உதவி பேராசிரியர் ஹக்கிம், பவுண்டேஷன் சார்பில் கிரியேட்டிவ் டைரக்டர் விரேன், இயக்குநர் மைக்கேல் மற்றும் கிருஷ்ணபாபு கலந்துகொண்டனர்.
10-Nov-2024