உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மவுண்டன் மூவர்ஸ் விருது

மவுண்டன் மூவர்ஸ் விருது

சோழவந்தான்: மதுரையில் நடந்த 'கேம்பிரிட்ஜ்' மாநாட்டில் கல்வி குழுமத்திற்கு 'மவுண்டன் மூவர்ஸ்' விருது வழங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இயங்கும் கல்விக் குழும பள்ளிகளின் சிறப்பான கல்வி சேவைக்காக 'கேம்பிரிட்ஜ்' பல்கலை இவ்விருதை வழங்கியுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட இவ்விருது கல்வித் திறன், அர்ப்பணிப்புக்கு முக்கிய அங்கீகாரம். கேம்பிரிட்ஜ் குழுவின் பிரதிநிதிகள் கேவின் கோய்ன், மனோஜ் பாஸ்கரன் விருதை வழங்க முதல்வர் ஷர்மிளா, ஆசிரியர்கள் ஹசீனாபர்வீன், காயத்ரி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !