உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயக்க நாள் விழா

இயக்க நாள் விழா

மதுரை:மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 43வது இயக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கிளைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். மாநகராட்சி வட்டார செயலாளர் ஜோசப் ஜெயசீலன் வரவேற்றார். செயலாளர் சீனிவாசன் 1984 ல் இயக்கம் துவங்கியது முதல் செயல்பாடுகளை விளக்கினார். நிர்வாகிகள் ஜெயமுருகன், அமலதாஸ், ஷர்மிளா, மாரீஸ்வரி, ரீட்டாராணி, ஸ்டெல்லாமேரி கலந்து கொண்டனர். பொருளாளர் எமிமான் ஞானசெல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை