உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  எம்.எஸ்.எம்.இ., கனெக்ட்: இன்று நிறைவு

 எம்.எஸ்.எம்.இ., கனெக்ட்: இன்று நிறைவு

மதுரை: மதுரை மடீட்சியாவில் பொதுத்துறை நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் (எம்.எஸ்.எம்.இ.,) நிறுவனங்களுக்கு பாலமாக விளங்கும் 'எம்.எஸ்.எம்.இ., கனெக்ட்' இன்று (டிச.19) நிறைவு பெறுகிறது. நேற்று நடந்த கண்காட்சியை கலெக்டர் பிரவீன்குமார் திறந்து வைத்தார். விழாவில் மடீட்சியா கவுரவ செயலாளர் அசோக் வரவேற்றார். எம்.எஸ்.எம்.இ., இணை இயக்குநர் சுரேஷ்பாபுஜி பேசியதாவது: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்வதை விட விற்பனை தான் சவாலாக உள்ளது. அவற்றின் தேவையை நிறைவேற்றம் வகையில் 25 க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், குறு, சிறு நிறுவனங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உதிரிபாகங்களின் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. 'ஜீரோ டிபெக்ட் ஜீரோ இபெக்ட்', உத்யம் சான்றிதழ் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் 25 சதவீத அளவிற்கு எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 4 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும், 3 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இந்திய சிறுதொழில் சங்க கூட்டமைப்பின் (பாஸி) மண்டல தலைவர் கார்த்திகேயன் பேசுகையில் ''பெரு நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். மார்க்கெட்டில் என்ன தேவை உள்ளதோ அதை உற்பத்தி செய்ய வேண்டும். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் துல்லியமாக இலக்கைத் தாக்கும் எஸ்.ஆர்.ஜி.ஜி., துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது. அதற்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதுமையான தொழில்களைக் கண்டறிந்து அதன்பின்பே செல்வதே நல்லது'' என்றார். சிட்பி வங்கி சென்னை மண்டல பொதுமேலாளர் பிரவீன்குமார், எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குநர் கிரண் தேவ் சலுட்டரி பேசினர். மடீட்சியா துணைத்தலைவர்கள் அரவிந்த், முகமது யாசிக், நிகழ்ச்சி தலைவர் அருண்பிரசாத், கே.வி.ஐ.சி., கோட்ட இயக்குநர் செந்தில்குமார் ராமசாமி, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கணேசன் பங்கேற்றனர். கண்காட்சி, கருத்தரங்கு இன்று (டிச.19) நிறைவுபெறுகிறது. புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை