முகூர்த்தக்கால் நடும் விழா
மேலுார்:மேலுார் கல்யாண சுந்தரேஸ்வரர், காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 2ல் நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. நிர்வாக அதிகாரி வாணி மகேஸ்வரி, அறங்காவலர் குழுத் தலைவர் முருகன், சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.