உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் முகூர்த்தக்கால் பூஜை

குன்றத்து கோயிலில் முகூர்த்தக்கால் பூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்க உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமைக்க நேற்று முகூர்த்தக்கால் பூஜை நடந்தது.இங்கு கும்பாபிஷேக பணிகள் துவங்கும் வகையில் பிப்.10ல் பாலாலயம் நடந்தது. சஷ்டி மண்டபம் எதிரே யாகசாலை அமைத்து, ஜூலை 10 காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்க உள்ளன. இதற்கான முகூர்த்தக்கால் பூஜை நடந்தது. உற்ஸவர் சன்னதியில் கம்ப பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. பின்பு மேளதாளங்கள் முழங்க முகூர்த்தக் கால் எடுத்துச் சென்று யாகசாலை அமைக்கும் இடத்தில் நடப்பட்டது.அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அரங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா, துணை கமிஷனர் சூரியநாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.ஜூன் 6ல் விசாக பால்குடம் திருவிழா, ஜூன் 7ல் மொட்டையரசு திருவிழா முடிந்த பின்பு யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளன. கோயில் சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ராஜா, ரமேஷ், சுரேஷ், சண்முகசுந்தரம், சிவா, ஆனந்த், சிவகுரு, குகன் ஆகியோர் பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ