உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகராட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதம்

நகராட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் துணைத்தலைவர் தேன்மொழி தலைமையில் நடந்தது. கமிஷனர் இளவரசன், பொறியாளர் சசிக்குமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கருக்கட்டான்பட்டியில் சாக்கடை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது என கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி வளர்ச்சிப்பணிகள் என்னென்ன நடக்கிறது, எந்த பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது என்ற விபரம் எதுவும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. தொடர்ந்து ஒரே நபரே டெண்டர் எடுக்கிறார். இதன் பின்னணி என்ன. எந்த பணியும் முழுமையாக நிறைவு செய்வதில்லை. ஒருவருக்கு பணி வழங்கினால் அதை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து கொடுத்தபின் அடுத்த டெண்டர் எடுக்க வழிசெய்ய வேண்டும் என விவாதம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை