முத்தமிழ் முற்றம் கலந்துரையாடல்
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் தமிழ் பிரியர்களுக்கான 'முத்தமிழ் முற்றம்' நிகழ்ச்சி, துணை முதன்மை நுாலகர் சந்தான கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.உதவி நுாலகர் சிவகாம சுந்தரி முன்னிலை வகித்தார். நுாலகர் ராஜஸ்ரீ வரவேற்றார். 'வழிகாட்டும் தமிழ்' எனும் தலைப்பில் எழுத்தாளர் சுபா பேசினார். தமிழ் இலக்கண இலக்கியங்கள் வாழ்க்கைக்கு எவ்வாறு வழிகாட்டும் என்பதை விளக்கினார். தமிழின் சிறப்புகளுடன், உணவுப்பழக்கம், மகிழ்ச்சியான மனநிலைக்கு வழிகாட்டியாக தமிழ் எவ்வாறு உதவும் என்பதையும் விளக்கினார்.நுாலகர் உமாசங்கர் நன்றி கூறினார். தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.