பருத்திச் செடியை உழுது அழித்த மர்ம நபர்கள்
கள்ளிக்குடி : கள்ளிக்குடி தாலுகா கல்லணை கிராமத்தைச்சேர்ந்த விவசாயி மாயாண்டி. இவரது சகோதரர்களுக்கு 7 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஒரு ஏக்கர் நிலத்தில் மாயாண்டி பருத்தி பயிரிட்டுள்ளார். சில நாட்களாக களை எடுத்து உரமிட்டு தண்ணீர் பாய்ச்சியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர்கள் இரவோடு இரவாகஉழவு செய்து பருத்திச்செடியை அழித்தது தெரிய வந்தது. கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.