தேசிய ரோலர் ஸ்கேட்டிங்
மதுரை : மைசூரில் 62வது வேக தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. மதுரை ஜெ.பி. ரோலர் ஸ்போர்ட்ஸ் கிளப் பிரகதி சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். ரிங், ரிலே, மிக்ஸட் மற்றும் ரோடு போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார். பயிற்சியாளர் ஜெயபாலன் பாராட்டினார்.