உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்ணுக்கு வளம் சேர்க்கும் நாட்டு கிடை மாடுகள்

மண்ணுக்கு வளம் சேர்க்கும் நாட்டு கிடை மாடுகள்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகாவில் அடுத்த சாகுபடிக்கு நிலங்களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் நாட்டு மாடுகளை கிடை அமர்த்தி வருகின்றனர்.அலங்காநல்லுார், சோழவந்தான் பகுதிகளில் வைகை பெரியாறு பாசனம் மூலம் முதல்போக நெல் சாகுபடி முடிந்துள்ளது. உசிலம்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடை மாடுகள் மேய்ச்சலுக்கு வந்துள்ளன. கோடை துவங்கிய நிலையில் இப்பகுதி விவசாயிகள் இயற்கை உரத்திற்காக வயல்களில் மாடுகளை கிடை அமர்த்துகின்றனர். இப்பகுதியில் அறுவடை முடிந்துள்ளதால் மாடுகளுக்கு தேவையான புற்கள், கிடைக்கும், வயலில் மாடுகளை கிடை அமர்த்த ஒரு இரவுக்கு மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.2000 வாங்கப்படுகிறது. சமீபத்திய மழையால் ஆடு, மாடுகளுக்கு பசுந்தீவனமும் கிடைக்கிறது. ஒரே இடத்தில் மாடுகள் நிறுத்தப்படும் போது அவற்றின் சாணம், சிறுநீர் நேரடியாக மண்ணுடன் கலந்து நுண்ணுாட்டம் அதிகம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி