உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயன்பாட்டுக்கு வந்தது புதிய ரேஷன் கடை

பயன்பாட்டுக்கு வந்தது புதிய ரேஷன் கடை

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டியில் ரூ. 12.70 லட்சத்தில் ரேஷன் கடை கட்டி பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் ரேஷன் பொருட்கள் வாங்க பழைய அங்கன்வாடி, நாடக மேடை என பல இடங்களுக்கு கார்டுதாரர்கள் அலைகழிக்கப்பட்டனர். ஒப்பந்ததாரர் சாவியை ஒப்படைக்காததே கடை பயன்பாட்டிற்கு வராததற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று அமைச்சர் மூர்த்தி புதிய ரேஷன் கடையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மகிழ்ச்சி அடைந்த கார்டு தாரர்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ