மேலும் செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டம்; 'புள்ளிங்கோ' கண்காணிப்பு
27-Dec-2024
மதுரை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று (டிச.31) இரவு வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்களில் குற்றங்களை தடுக்க துணைகமிஷனர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிகள் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் போலீஸ் அனுமதி பெற்றே நடத்தவேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் கண்டிப்பாக எந்த கொண்டாட்டமும் கூடாது. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.மது அருந்தி விட்டு டூவீலரில் மிக அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது மற்றும் பொதுமக்களை பயமுறுத்தும் செயல்களை தடுக்க நத்தம் மேம்பாலம், வைகையாற்றின் இருகரைகள், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் லோகநாதன் எச்சரித்துள்ளார்.
27-Dec-2024