மேலும் செய்திகள்
விடுதலையான பெயின்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
28-Jan-2025
மதுரை : பாலியல் ரீதியாக தவறாக நடக்க சில மாணவியரை துாண்டிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து பேராசிரியை நிர்மலா தேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர், ''பெரிய பொறுப்பிலுள்ள சிலருடன் அனுசரணையாக நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்,'' என ஒரு மாணவியிடம் அலைபேசியில் பேசிய ஆடியோ பதிவு வெளியானது. பாலியல் ரீதியாக தவறாக நடக்க சில மாணவியரை துாண்டியதாக 2018ல் அருப்புக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். பின் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்நீதிமன்றம் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2024 ஏப்.,29 ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பு: பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி., மேல்முறையீடு செய்துள்ளது. அம்மனு நிலுவையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: அவ்வழக்குடன் சேர்த்து பிப்.25 ல் இம்மனுவையும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டார்.
28-Jan-2025