உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / என்.எம்.எம்.எஸ்., தேர்வு மதுரைக்கு 4வது இடம் * ஒரே பள்ளியில் 105 மாணவர் தேர்வு

என்.எம்.எம்.எஸ்., தேர்வு மதுரைக்கு 4வது இடம் * ஒரே பள்ளியில் 105 மாணவர் தேர்வு

மதுரை: மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வில் மதுரை மாவட்டத்தில் 414 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4வது இடம் பெற்றுள்ளனர்.இத்தேர்வு பிப்.22ல் நடந்தது. மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 9,167 பேர் பங்கேற்றனர். 414 பேர் தேர்ச்சி பெற்றனர். திருநெல்வேலி (508), சேலம் (477), துாத்துக்குடியை (470) அடுத்து மதுரை 4வது இடம் பெற்றது. நகர் பகுதியில் அதிகபட்சமாக செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளியில் 105 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தொடக்க கல்வியில் 15 ஒன்றியங்களில், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள் பிரிவில் 53 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் அதிகபட்சமாக கள்ளிக்குடி ஒன்றியத்தில் 36 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.சி.இ.ஓ., ரேணுகா கூறியதாவது: கடந்தாண்டு 296 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு தேர்ச்சியை அதிகரிக்க அனைத்து பள்ளிகளிலும் என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு என தனிப் பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை