உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பெயரளவில் பெரிய அருவி புனரமைப்பு பணி

 பெயரளவில் பெரிய அருவி புனரமைப்பு பணி

மேலுார்: கேசம்பட்டி பெரிய அருவியில் கால்வாய் அமைக்கும் பணி நடக்கும் போதே நொறுங்குவதால் புனரமைப்பு பணியின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. கேசம்பட்டி, கடுமிட்டான்பட்டியில் மூன்று மலைகளின் அடிவாரத்தில் பெரிய அருவி நீர்த்தேக்கம் உள்ளது. இதில் 23.6 மில்லியன் கன அடி நீரை சேமிக்கவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறவும் 1969ல் அன்றைய முதல்வர் காமராஜரால் அமைக்கப்பட்டது. கடந்தாண்டு புனரமைக்க ரூ. 2.60 கோடி ஒதுக்கப்பட்டு 4 மாதமாக பெயரளவில் பணி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயி ஜீவா கூறியதாவது : தரமற்ற முறையில் கால்வாய் கட்டுவதால் சிமென்ட் பூச்சு தொட்டாலே உதிர்வதோடு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கு வரும் முன்பே கால்வாய் உடைவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. பணிகள் குறித்த தகவல் பலகை வைக்கவில்லை என்றார். நீர்வளத்துறை ஏ.இ.,ராம்குமார் கூறுகையில், குறைபாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை