செவிலியர்கள் சங்கம் கண்டனம்
மதுரை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை கைது செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்க பொதுச் செயலாளர் சுபின் கூறியதாவது: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அக். 12 ல் சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த அனுமதி கேட்டு 10 நாட்களுக்கு முன்பே மனு கொடுத்த நிலையில் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளை வீட்டுக்காவலில் சிறைவைத்தனர். போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஊழியர்களை கைது செய்தனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஊழியர்களின் குரல்வளையை நெரிப்பதுடன் அடிப்படை உரிமையை தமிழக அரசு பறிக்கிறது என்றார்.