உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: 'கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல, தங்களுக்கும் ரூ.6750 ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மேலாதேவி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஒய்யம்மாள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வி விளக்கி பேசினார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும்போது பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் சின்னப்பொன்னு, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா, வருவாய்த்துறை, கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மாரியப்பன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரி உட்பட பலர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாநில துணைத் தலைவர் அமுதா, முன்னாள் மாவட்ட செயலாளர் சோலையப்பன் உடபட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ