உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அக். 1 முதல் 24 மணி நேரமும் செயல்பட மதுரை விமான நிலையம் தயார்

அக். 1 முதல் 24 மணி நேரமும் செயல்பட மதுரை விமான நிலையம் தயார்

அவனியாபுரம்:மதுரை விமான நிலையம் அக்டோபர் 1 முதல் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.மதுரை விமான நிலையத்தில் காலை 7:25 மணி முதல் இரவு 8:55 மணி வரை விமான போக்குவரத்து உள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபுக்குடியரசு ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூரு, டில்லி, ஐதராபாத் ஆகிய உள்நாட்டு நகரங்களுக்கும் விமான சேவை நடக்கிறது.மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டுமென தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. தொழில் வர்த்தக, வியாபார சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.இந்நிலையில் அக்டோபர் 1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.அக்டோபரில் தொடங்கி மார்ச் வரை விமானங்களை இயக்குவதற்கான குளிர்கால கால அட்டவணையை விமான நிறுவனங்கள் தயார் செய்து கொடுப்பர். மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்பட உள்ளதால், விருப்பமுள்ள நிறுவனங்கள் இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கான அட்டவணையை தயார் செய்து அனுப்புமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 55 பேர் புதிதாக வந்துள்ளனர். விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் கூடுதலாக்கப்பட உள்ளனர். தற்போதுள்ள வீரர்களையும், பணியாளர்களையும் கொண்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தடையின்றி செயல்பட முடியும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Maheswaran
செப் 21, 2024 08:31

பல நாள் கனவு நினைவாகிறது. கோல்கத்தா குவஹாத்தி டெல்லிக்கு மேலும் விமானங்கள் இயக்க வேண்டும்


புதிய வீடியோ