உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துப்படி

குன்றத்தில் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துப்படி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேக பணிகளின் ஒரு பகுதியாக பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நேற்று துவங்கியது.உற்ஸவர் சன்னதியில் அஷ்டபந்தன மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சுக்கான், கொம்பு அரக்கு, குங்குலியம், செந்துாரம், சொர்ண காவி, பஞ்சு, தேன்மிளகு, வெண்ணெய், மருந்து இடிக்க பயன்படுத்தப்படும் உரல், உலக்கை மருந்து சாத்துப்படி செய்வதற்கு பயன்படுத்தப்படும் சுத்தியல், இரும்பு பூச்சு கரண்டி ஆகியவை உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு வைத்து சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர்.அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா மருந்து இடிக்கும் பணியை துவக்கி வைத்தார். அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்மதேவன், ராமையா, கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், சரிபார்த்து அலுவலர் துணை கமிஷனர் பொன் சுவாமிநாதன். திருப்பரங்குன்றம் ஆய்வாளர் இளவரசி, கோயில் கண்காணிப்பாளர் ரஞ்சனி சத்தியசீலன் முன்னிலையில் மருந்து தயார் செய்து பாலாலயம் நடத்தப்பட்ட 120 பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி துவங்கியது. மற்ற பரிவார தெய்வங்கள், மூலவர்களுக்கு மருந்து சாத்தும் பணி தொடர்ந்து நடைபெறும்.ஸ்தபதி முசிறி திருஞானசம்பந்தம் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் மருந்து சாத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ