அலுவலகம் முற்றுகை
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டி மேல தெருவில் ஒரு வாரமாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதியினர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்பகுதியில் சின்டெக்ஸ் அமைத்து தரவேண்டியும், காலிக் குடங்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் முன்பு அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் ஆலயமணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.