போலீசாரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்திய அதிகாரிகள்
மதுரை: ஆண்டுதோறும் அக்.,21ல் தமிழக காவல்துறையில் மறைந்த காவலர்களுக்கான நீத்தார் நினைவு 'காவலர் வீர வணக்க நாளாக' அனுசரிக்கப்படுகிறது. காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒரு வாரத்திற்கு நகரைச் சுற்றி வலம் வரும் காவல் வாத்தியக் குழுவினரின் இசையுடன் கூடிய காவல் விழிப்புணர்வு வாகனத்திற்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பணியின்போது கொரோனாவால் இறந்த போலீசாருக்கு மரியாதை செலுத்த கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதன்படி அவர்களின் வீடுகளுக்கே சென்று துணைகமிஷனர்கள் அனிதா, வனிதா, திருமலைக்குமார் தலைமையில் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.