உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இனிப்பு, கார தயாரிப்பு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

இனிப்பு, கார தயாரிப்பு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

மதுரை: தீபாவளி பண்டிகையையொட்டி உணவுப்பாதுகாப்புத்துறையின் பதிவெண் சான்றிதழ் இல்லாமல் மதுரையில் இனிப்பு, கார தின்பண்டம் தயாரிக்கும் கடைகள், விற்பனை கடைகளில் அத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: இந்த வாரத்தில் 782 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் அதிகளவு 'கலரிங்' சேர்க்கப்பட்ட 38 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 15 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 108 கடைகளில் அதிக 'கலரிங்' சேர்க்கப்பட்ட இனிப்பு மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்.தீபாவளி பண்டிகைக்கு புதிதாக அமைக்கப்படும் தின்பண்ட கடைகள் நான்கு நாட்களுக்கு முன்னதாக தயாரிப்பு மற்றும் விற்பனையைத் துவங்கும். பேக்கரி உணவு, இனிப்பு, கார தின்பண்டங்களை வாங்குவோர் அந்நிறுவனத்திற்கு உணவுப்பாதுகாப்புத்துறையின் லேபிள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். தயாரிப்பு, காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். அதிக கலரிங் இருந்தாலோ கெட்டுப்போனதாக இருந்தாலோ 94440 42322 வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை