உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆம்னி பஸ் தீப்பிடித்தது

ஆம்னி பஸ் தீப்பிடித்தது

கள்ளிக்குடி: பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று காலை 35 பயணிகளுடன் ஆம்னி பஸ் சென்றது. கள்ளிக்குடி நல்லமநாயகன்பட்டி அருகே பஸ் டயர் பகுதியில் புகை வந்ததை பார்த்த ஓட்டுநர் சுப்புராஜ் ரோட்டோரமாக நிறுத்த முயன்றார். டயர் வெடித்து ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது.அவசர அவசரமாக பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கினர். டயரில் பிடித்த தீ பஸ் முன்பக்க பகுதியில் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அணைத்தனர். மாற்று பஸ் மூலம் பயணிகள் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை