ஒரு போன் போதுமே
குண்டும் குழியுமான ரோடுகள்மதுரை சூர்யா நகரில் மீனாட்சி நகர் வடக்கு 8வது தெருவில் டூவீலரில் பயணிக்க முடியாத அளவிற்கு ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. மழை நேரங்களில் இன்னும் மோசம். மாநகராட்சி சரிசெய்ய வேண்டும்.- எழில், சூர்யாநகர்துர்நாற்றம் தாங்க முடியலமதுரை எஸ்.எஸ்.காலனி ஜவகர் முதல் தெருவில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரகு, எஸ்.எஸ்.காலனிஆபத்தான ரோடுகள்மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகர் நுழைவு பகுதியிலிருந்து ரோடுமோசமான நிலையில் உள்ளன. குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படாததால் டூவீலரில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பத்மநாபன், துரைசாமிநகர்தேங்கும் கழிவு நீர்மதுரை உலக தமிழ்ச்சங்கம் முன்பு உள்ள கால்வாயில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.விமல், கே.கே.நகர்பாதுகாப்பில்லாத சிக்னல் பகுதிமதுரை பைபாஸ் ரோடு செங்கோல் நகர் சிக்னல் சந்திப்பில் பெரும்பாலும் போக்குவரத்து காவலர்கள் பணியில் இருப்பதில்லை. சிக்னலும் இயங்காததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். போலீஸ் கமிஷனர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மனோகரன், ஆரப்பாளையம்பஸ் வசதி வேண்டும்மதுரை செல்லுார் 60 அடி ரோட்டில் இருந்து பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணிக்கு பஸ், மினி பஸ் வசதி இல்லை. போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நடராஜன், செல்லுார்வாகன ஆக்கிரமிப்புஅலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடம் முன்பு வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரத்தினம், அலங்காநல்லுார்அள்ளப்படாத குப்பைமதுரை அழகப்பன் நகர் குடியிருப்போர் நலச்சங்க விளையாட்டு மைதானம் முன்பு பல நாட்களாக குப்பை அள்ளாமல் இருக்கின்றது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலா, டி.வி.எஸ். நகர்