உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!

புகாரளித்தும் பயனில்லை மதுரை கரும்பாலையில் 10 அடிக்கும் மேல் இருந்த ரோடு ஆக்கிரமிப்பால் 3 அடிக்கும் குறைவாகி விட்டது. பாதாள சாக்கடை பழுது, மின் இணைப்பு குறைபாடுகள் என பல்வேறு பிரச்னைகளில் வாழ்கிறோம். பலமுறை புகாரளித்தும் பயனில்லை. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - விக்கி, கரும்பாலை. தெருநாய் தொல்லை மதுரை கோமதிபுரம் பாரதி முதல் குறுக்குத்தெருவில் தெருநாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளதால் குழந்தைகள், வயதானோர் வெளியில் நடமாட பயப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராகவன், கோமதிபுரம். காற்று தான் வருகிறது தனக்கன்குளம்ஊராட்சி சீதாலட்சுமி நகர் குடியிருப்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீட்டுக்கு 2 இணைப்பு குழாய்கள் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டது. தற்போது வரை தண்ணீருக்குப் பதிலாக காற்று தான் வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சீதாலட்சுமி நகர் மக்கள். எங்கும் குப்பை மதுரை டி.வி.எஸ்., நகர் லட்சுமி நகரில் ரோட்டோரம் குப்பை கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. கால்நடைகள் குப்பையை கிளறி ரோட்டில் இழுத்துப் போடுவதால் இடையூறு ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாலா, டி.வி.எஸ்., நகர். நோய்த் தொற்று அபாயம் மதுரை எச்.எம்.எஸ்., காலனியில் கழிவுநீர் கசிந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி இருப்பதால் நோய்த் தொற்று அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுந்தர் கிருஷ்ணன், எச்.எம்.எஸ்., காலனி. மூடப்படாத குழிகள் மதுரை புதுவிளாங்குடி தென்றல்நகர் மெயின்ரோட்டில் குடிநீர் குழாய் வால்வு அமைக்க தோண்டிய 5 அடி ஆழம் கொண்ட குழி பணிமுடிந்தும் மூடப்படவில்லை. வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் முன்பு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சண்முகநாதன், புது விளாங்குடி. அச்சுறுத்தும் கம்பி மதுரை கூடல்நகர் - பாலமேடு மெயின் ரோடு இந்தியன் வங்கி அருகே ரோட்டில் சென்டர் மீடியன் கம்பி சேதமடைந்து வளைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சசிக்குமார், ஆனையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி