உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!

தெருநாய் தொல்லை மதுரை துரைசாமிநகர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை கும்பலாக துரத்துகின்றன. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். - சங்கரராமன்துரைசாமிநகர் மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா சமயநல்லுார் வைரவநத்தம் ஊராட்சிக்குட்பட்ட டிரான்ஸ்பார்மர் குப்பை, விறகுக் கட்டைகளால் சூழப்பட்டுள்ளது. மின்வாரியம் மின்விபத்து ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - பால்வண்ணன், வைரவநத்தம் கழிவுநீர் கசிவு மதுரை எச்.எம்.எஸ்., காலனி குடிநீர் தொட்டி அருகில் கழிவுநீர் கசிந்து வீடுகளின் முன்பு தேங்கி கிடக்கிறது. நோய் தொற்று அபாயம் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுந்தர் கிருஷ்ணன்எச்.எம்.எஸ்., காலனி போக்குவரத்து நெரிசல் மதுரை-அலங்காநல்லுார், அ.புதுப்பட்டி வழியாக செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் உள்ளே வருவதில்லை. வெளியிலேயே இறக்கி, ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - அருண், அலங்காநல்லுார் சேதமடைந்துள்ள மேன்ஹோல் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள மேன்ஹோல் சேதமடைந்து, அதன் முனைகள் வளைந்து உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - அஜித், கீழவாசல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை