உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!

தேங்கும் கழிவுநீர் மதுரை நடராஜ் நகர் பாண்டியம்மாள் தெருவில் கழிவுநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. இங்குள்ள விநாயகர் கோயிலைச் சுற்றிலும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. - அரவிந்த், கோச்சடை. இடையூறு குப்பைத்தொட்டி மதுரை மீனாம்பாள்புரம் செல்லுார் ஓடைப்பாலம் ரோட்டின் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - அபுபக்கர், செல்லுார். சகதியில் ரோடு அவனியாபுரம் காவிரி தெரு ரோட்டில் யாரும் செல்ல முடியாத அளவு பள்ளம் தோண்டி மூடப்படாமல் உள்ளது. மழை நேரம் சேறும், சகதியுமாக ரோடு காட்சியளிக்கிறது. தார் ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார், அவனியாபுரம். சுவாசக்கோளாறு ஆபத்து மதுரை கிழக்கு ஊராட்சி ராஜாக்கூர் கருப்பசுவாமி கோயில் தெரு பகுதியில் சம்பை புல் அதிகளவில் வளர்ந்துள்ளது. அதன் பூக்கள் உதிர்ந்து வீட்டுக்குள் பரவுவதால் குடியிருப்போருக்கு சுவாசக்கோளாறு வரும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணன், ராஜாக்கூர். கண்டுக்காத அதிகாரிகள் சோழவந்தான் தென்கரை இணைப்பு பாலத்தில் பள்ளங்கள் உள்ளதால் அவ்வழியே செல்வோர் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் பயனில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - கவுரிநாதன், சோழவந்தான். வழுக்கி விழும் ஆபத்து பரவை பேரூராட்சி ஊர்மெச்சிக்குளம் அபி கார்டன் தெருவில் ரோடு பள்ளங்களால் நிறைந்துள்ளது. அவ்வழியே வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். - வீரா, ஊர்மெச்சிக்குளம். தெருநாய்கள் தொல்லை மதுரை கிருஷ்ணாபுரம் சீனிவாசன் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தனியாக செல்வோரை துரத்தி சென்று தாக்குகின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தமயந்தி, கிருஷ்ணாபுரம். துர்நாற்றம் வீசுதே மதுரை டோக் நகர் 3 வது தெரு நுழையும் இடத்தில் கொட்டும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - சத்யராஜ், டோக் நகர். வெள்ளக் காடான ரோடு மதுரை அனுப்பானடி நடுத்தெருவில் இருந்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கந்தவடிவேல், அனுப்பானடி. ஆக்கிரமிப்பு வாகனங்கள் மதுரை தெப்பகுளத்தில் வார இறுதி நாட்களில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் மக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார், தெப்பகுளம். அச்சுறுத்தும் பள்ளங்கள் திடீர் நகர் மெயின்ரோட்டில் வாகன ஓட்டிகள் திடீரென வரும் பள்ளங்களால் தடுமாறி விபத்துக்கள் நடக்கின்றன. நெடுஞ்சாலை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - வெற்றிவேல், திடீர் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி