உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பால் அவதி

ஆக்கிரமிப்பால் அவதி

அய்யர்பங்களா - மூன்று மாவடி ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால், மக்கள் போக்குவரத்து நெரிசலில் தவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம், அய்யர்பங்களா. * தெருநாய்கள் தொல்லை மதுரை டோக் நகர், எச்.எம்.எஸ்., காலனி, கோ ஆப்டெக்ஸ் காலனியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. தனியாக செல்வோரை துரத்திச் சென்று தாக்குகின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராமநாதன், டோக் நகர். * வேகத்தடை அவதி மதுரை சம்மட்டிபுரம் மெயின் ரோட்டில் அரை கி.மீ., செல்வதற்குள், 7 வேகத்தடைகள் உள்ளன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். - சண்முககுமரன், சம்மட்டிபுரம். * மார்க்கெட் செயல்படுமா மேலுார் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள தினசரி மார்க்கெட் முழுமையாக செயல்பட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மணவாளன், மேலுார். * போக்குவரத்து நெரிசல் கருப்பாயூரணியில் சக்கிமங்கலம் பிரிவில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இருந்தும்கூட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. ரோட்டோர வாகனம், கடைகளின் ஆக்கிரமிப்புகளே காரணம். போலீசார் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும். -ராசாத்தி, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ