உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுகாதார வளாகம் இருந்தும் திறந்தவெளி

சுகாதார வளாகம் இருந்தும் திறந்தவெளி

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் ஊர்சேரி ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகத்தால் அப்பகுதியினர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஊராட்சியில் ஆதி திராவிடர் மயான ரோட்டின் பகுதியில் 2022ல் மத்திய அரசின் துாய்மை பாரத இயக்கம்,தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15வது நிதிக்குழு மானிய திட்ட நிதிகளில் இருந்து ரூ.5.25 லட்சத்தில் சமுதாய சுகாதார கழிப்பறை கட்டப்பட்டது. தண்ணீர் வசதியின்றி இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதற்கான போர்வெல் மெயின் ரோட்டில் இருந்த குளியல் தொட்டி அருகே அமைத்துள்ளனர். 'பைப் லைன்' வழங்காததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மயானத்திற்கு செல்லும் 'பேவர் பிளாக்' சாலை திறந்தவெளி கழிப்பிடமாக மாறி உள்ளது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !