மேலும் செய்திகள்
கங்கை அறக்கட்டளை 12 ம் ஆண்டு துவக்க விழா
17-May-2025
மதுரை: மதுரையில் வெற்றி அறக்கட்டளை துவக்க விழா முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் தலைமையில் நடந்தது.நடிகை கவுதமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிறுவனர்கள் விஜயலட்சுமி, ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.சரவணன் பேசுகையில் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்றார். மதுரை முத்து, மேலாளர்கள் காயத்ரி, சாந்தகுமாரி பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை, பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ராமமூர்த்தி நன்றி கூறினார்.
17-May-2025