துவக்க விழா
மதுரை: அவனியாபுரம் பெரியசாமி - திருப்பதி நகர் குடியிருப்போர் சங்கக் கட்டட துவக்க விழா நடந்தது. கவுரவத் தலைவர் குருசாமி குத்துவிளக்கு ஏற்றினார். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வேல்முருகன் வரவேற்றார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., சங்க சேவை குறித்து பேசினார். கவுன்சிலர்கள் கருப்பசாமி, அய்யனார், முத்துலட்சுமி, இன்குலாப் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் முன்னாள் சேர்மன் முனியாண்டி, துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் சந்திரசேகரன், செயலாளர் அழகுராஜ், சட்ட ஆலோசகர் நீலகண்டன் கலந்துகொண்டனர். இணைச் செயலாளர் நேதாஜி ஏற்பாடு செய்திருந்தார்.