மூடப்பட்ட கோயில் திறப்பு
சோழவந்தான் : சோழவந்தான் அருகே சர்ச்சையால் மூடப்பட்டிருந்த துர்கை அம்மன் கோயில் திறக்கப்பட்டது. கோயில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே 3 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை பெரிதானதால் அதிகாரிகளால் கோயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிபாட்டிற்கு கோயிலை திறக்க உத்தரவிட்டது. இதனால் தீர்த்த குடத்துடன் ஒரு தரப்பினர் வழிபட சென்றனர். இதை எதிர்த்த மற்றொரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கோயில் திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் நடந்து இரு தரப்பினரும் வழிபாடு செய்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.