மேலும் செய்திகள்
விழிப்புணர்வு குழுவுக்கு வரவேற்பு
14-Aug-2025
மதுரை: மதுரை பொய்கைக்கரைப்பட்டியில் 3ம் பார்வை அறக்கட்டளையின் அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கான புதிய கட்டடத் திறப்பு விழா நடந்தது. விடுதி பயனாளி கார்த்திக் வரவேற்றார். மாவட்ட நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னா புதிய கட்டடத்தை திறந்து வைத்து, விடுதி கடந்து வந்த பாதைக்கான புத்தகத்தை வெளியிட்டார். இந்திய வழக்கறிஞர் சங்கச் செயலாளர் சாமிதுரை, கவிஞர் ரவி, தமிழாசிரியர் பால கணேசன், இந்திய விளையாட்டு ஆணைய உதவி இயக்குநர் செல்வமணி, அறக்கட்டளை அறங்காவலர் பாஸ்கர் பேசினர். விடுதி நிறுவனர் கோபி நன்றி கூறினார்.
14-Aug-2025