உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐ.டி.ஐ.,ல் ஜூன் 13 வரை சேர வாய்ப்பு

ஐ.டி.ஐ.,ல் ஜூன் 13 வரை சேர வாய்ப்பு

மதுரை: மதுரை அரசு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.,) நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கைwww.skilltraining.tn.gov.inமே 19 முதல் நடக்கிறது. 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். மதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் ஓராண்டு தொழிற்பிரிவு, ஈராண்டு தொழிற்பிரிவு என தலா 12 பிரிவுகளில் 1020 சீட்கள் உள்ளன.கட்டணமின்றி பயிற்சியும், அரசு சலுகைகளும் வழங்கப்படும். உதவித்தொகை மாதம் ரூ.750. அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.ஆயிரம். இலவச பஸ்பாஸ், விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், 2 செட் சீருடை, தையற்கூலி, ஒரு செட் காலணி, அடையாள அட்டை வழங்கப்படும்.பயிற்சியின்போதே வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்யப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 13. விருப்பமுள்ளோர் நேரிலும் சென்று சேரலாம். விவரங்களுக்கு: 97513 59944 ல் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி