உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகை அருகே மணல் திருட்டு குற்றவியல் வழக்கு தொடர உத்தரவு

வைகை அருகே மணல் திருட்டு குற்றவியல் வழக்கு தொடர உத்தரவு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றின் கரையோரம் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக யாரும் மணல் அள்ளினால் குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.பள்ளப்பட்டி செந்தில் முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் வைகை ஆற்றின் கரையோரம் அரசு புறம்போக்கு நிலத்தில், குறிப்பிட்ட சர்வே எண்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல், விவசாயம், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும். திண்டுக்கல் கலெக்டர், கனிமவள உதவி இயக்குனரிடம் புகார் அளித்தோம். மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாரியப்பன் ஆஜரானார். அரசு பிளீடர் திலக்குமார்: மணல் எதுவும் அள்ளப்படவில்லை. அங்கு மணல் எடுப்பதை ஏற்கனவே அரசு நிறுத்திவிட்டது என்றார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. ஏதேனும் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டால் அவர்கள் மீது அதிகாரிகள் குற்றவியல் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை