உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கன்னியாகுமரி கோயிலில் கடைகளை அகற்ற உத்தரவு

கன்னியாகுமரி கோயிலில் கடைகளை அகற்ற உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கல் மண்டபத்திலுள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி நாகராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 'கன்னியம்பலம்' என்ற பெயரில் பழமையான கல் மண்டபம் உள்ளது. அது நம் முன்னோர்களின் கட்டடக்கலைக்கு சான்றாகும். திருவிழா காலங்களில் வீதி உலாவின்போது பகவதி அம்மன் கல் மண்டபத்திற்கு வந்து செல்வது வழக்கம். கல் மண்டபத்தின் துாண், தரையை சேதப்படுத்தி கோயில் நிர்வாகம் கடைகள் அமைத்துள்ளது. குப்பைகள் தேங்கியுள்ளன. மண்டபத்திலுள்ள விநாயகர் கோயிலை சரியாக பராமரிக்கவில்லை. குப்பைகள், கடைகளை அகற்ற நடவடிக்கை கோரி அறநிலையத்துறை கமிஷனர், சுசீந்திரம் இணை கமிஷனர், கோயில் மேலாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.ராமு ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் பகுதியில் வணிக நடவடிக்கை கூடாது. கடைகளை உனடியாக அகற்ற வேண்டும். கமிஷனர், இணை கமிஷனர், கோயில் மேலாளர் அக்.16 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை