உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் அக்.11ல் உயிர்ம வேளாண் கண்காட்சி

மதுரையில் அக்.11ல் உயிர்ம வேளாண் கண்காட்சி

மதுரை : வேளாண் துறை சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அக். 11ல் உயிர்ம வேளாண் விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி நடக்கிறது. வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் கூறியதாவது: மாவட்ட அளவில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்ம வேளாண்மை முறையில் இயற்கை சாகுபடி செய்கின்றனர். பயிருக்கு தேவையான சத்துகள் அனைத்தும் இயற்கையிலேயே இடம் பெற்றிருக்கிறது. ரசாயன உரங்களை பயன் படுத்தியதால் தான் மண்ணில் அங்கக கரிமச்சத்து குறைந்து விட்டது. நஞ்சில்லா விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த கண்காட்சி நடக்க உள்ளது. இயற்கை இடுபொருட்கள், பாரம் பரிய விதை ரகங்களின் ஸ்டால்கள் கண்காட்சியில் இடம்பெறும். வேளாண் பண்ணை இயந்திரங்கள், நுண்ணீர் பாசன கருவிகள் காட்சிக்கு வைக்கப்படும். விவசாயிகள், விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் நடைபெறும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை