உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இயற்கை வேளாண் பயிற்சி

 இயற்கை வேளாண் பயிற்சி

உசிலம்பட்டி: தேனி மாவட்டம் குள்ளப்புரம் வேளாண் கல்லுாரியின் இறுதியாண்டு மாணவர்கள் அகினோ, தருண், பிரவீன், சஞ்சய், இளங்கோ, தர்சன், முத்தையா, அருண், ஹரி, மார்பான், சஞ்சய்கார்த்திக், சசி, விநாயக், கிஷோர் ஆகியோர் கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி கிராமப்பகுதியில் தங்கி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். போத்தம்பட்டி இயற்கை விவசாயி குரும்பன் தோட்டத்தில் மாட்டுச்சாணம், கடுக்காய், அதிமதுரம், வெல்லம் சேர்த்து ஆர்க்கியபாக்டீரியா கரைசல் தயார் செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் காட்டினர். உசிலம்பட்டி வேளாண் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ