உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரை, ஊசி விற்பனை உரிமையாளர் கைது

மதுரையில் மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரை, ஊசி விற்பனை உரிமையாளர் கைது

மதுரை : மதுரையில் மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஏற்ற பயன்படுத்தும் சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் மெடிக்கல் ஸ்டோர்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். செல்லுார் 80 அடி ரோட்டில் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே போலீசாரை கண்டதும் ஒரு இளைஞர் தப்பியோட முயற்சித்தார். அவரை பிடித்து விசாரித்த போது போதை மாத்திரைகள், காலி சிரிஞ்சுகள், குளுகோஸ் பாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.அவர் செல்லுார் தாகூர்நகரை சேர்ந்த உதயகுமார் 21, பெரியார் பஸ் ஸ்டாண்ட் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரைகள் வாங்கியதும், குளூகோஸ் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி போதை மருந்து கலந்து போதை ஏற்றிக்கொள்வதும் தெரியவந்தது.இதையடுத்து சம்பந்தப்பட்ட மெடிக்கல் ஸ்டோரில் சோதனை நடத்திய போலீசார் போதை மாத்திரைகள், காலி சிரிஞ்சுகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர் ஜெய்ஹிந்துபுரம் அப்துல் ரஹ்மானை 23, கைது செய்தனர். மெடிக்கல் ஸ்டோருக்கு 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VASANTHA RANI
அக் 16, 2024 13:41

விளாங்குடி காரல்மாஸ் நகர் திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி கட்டடம் மற்றும் ஸ்ரீராம் பள்ளிவளாகம் தாமரை வீதியில் இரவு நேரங்களில் இளைஞர்கள் .தாராளமாக பயன்படுத்துகிறார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை