உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல் மூடைகள் தேக்கம்: விவசாயிகள் கலக்கம் லாரிகளால் தாமதம்

நெல் மூடைகள் தேக்கம்: விவசாயிகள் கலக்கம் லாரிகளால் தாமதம்

சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை நெல் கொள்முதல் மையத்தில் தேங்கியுள்ள நெல் மூடைகளை விரைந்து எடுத்துச் செல்ல வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இம்மையம் நாச்சிகுளம் செல்லும் ரோட்டருகே உள்ளது. சில நாட்களாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மூடைகளாக கட்டி அடுக்கப்பட்டுள்ளன. இதனை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூடைகள் தேங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். விவசாயி முத்து இருளாயி கூறியதாவது: போதுமான இட வசதியின்றி நெல் மூடைகள் திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ளன. இதனால் வெயில், மழையால் சேதமடைந்து மூடைகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். லாரிகள் வர தாமதமாவதால் நெல் மூடைகள் தேங்குகின்றன. இதனால் அறுவடை செய்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை ரோட்டோரம் திறந்தவெளிகளில் கொட்டும் நிலை ஏற்படுகிறது. இதனால் மழையில் இருந்து நெல்லை பாதுகாப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. தற்போது களம் இருக்கும் இடத்திலேயே அரசு நிலம் உள்ளது. களத்தை விரிவுபடுத்தி சிமென்ட் தளம் அமைத்து மூடைகளை பாதுகாக்க தகர செட் அமைக்க வேண்டும். மேலும் பத்தாயிரம் மூடை நெல் வரவிருப்பதால் லாரிகள் மூலம் தேங்கியுள்ள மூடைகளை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
நவ 07, 2025 11:24

தூய்மையற்ற நகராட்சி - மதுரை திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கழிவுநீர் வாய்க்கால் Sewer Canal கட்டுமானப் பணிகளில் பல்வேறு தரக்குறைவு காணப்படுவதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். காணப்பட்ட குறைகள்: 1. தரமற்ற சிமெண்ட் கலவை பயன்படுத்தப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 2. மழைக்காலத்தில் மணல் நிரப்புதல் செய்யாமல் பணிகள் நடைபெறுவதால் • மண் தள்ளாடுதல் • குழிகள் உருவாகுதல் • நடைபாதைகள் சரிவதும், மக்கள் வழுக்கி விழும் அபாயமும் ஆகியவை அதிகரித்துள்ளன. 3. பணிகள் முடிந்த பின்னும் நடைபாதைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. 4. வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்பட்டுள்ளன — இதனால் • கொசு பெருக்கம் • துர்நாற்றம் • சுகாதாரப் பிரச்சினை ஆகிய அபாயங்கள் உண்டு. பொது மக்களின் முக்கிய கவலை: இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ₹90 லட்சம் என அறிந்துள்ளோம். உள்ளூர் மக்கள் கருத்தின்படி, ₹25-30 லட்சம் வரை ஊழல் பணம் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோல் செய்யப்பட்டால் மீதமுள்ள தொகையில் தரமான கட்டுமானம் செய்ய இயலாது என்பதே குடியிருப்பாளர்களின் கவலை. பொது பாதுகாப்பு அபாயம்: இந்தப் பணிகள் தரக்குறைவாக நீடித்தால் • வாய்க்கால்கள் உடைபடும் • நீர் தேக்கம் • மண் சரிவு • மக்கள் காயம் / உயிரிழப்பு என பாரிய அபாயங்கள் உருவாகும். இதற்கான முழுப் பொறுப்பும் நகராட்சியின்மேல் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் கோரிக்கைகள்: 1. ஒப்பந்ததாரரின் பணிகளுக்கு தரச் சோதனை செய்து அறிக்கை வெளியிடவும். 2. மணல் நிரப்புதல் மற்றும் நடைபாதை சீரமைப்பு உடனடியாக செய்யப்பட வேண்டும். 3. திறந்த வாய்க்கால்களை தகுந்த தகடுகளால் மூடி பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும். 4. சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும். 5. அனைத்து பணிகளும் பொது தொழில்நுட்ப தரநிலைகளுக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும். முடிவில் மக்களின் உயிர், பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு தயவுசெய்து இந்தப் புகாரில் உடனடியாக நீதிசார்ந்த மற்றும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை