உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நெல் கொள்முதல் துவக்கம்

 நெல் கொள்முதல் துவக்கம்

மேலுார்: இ.மலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை வைத்த நெல்லை கோடவுனிற்கு கொண்டு செல்ல லாரி வராததால் 10 நாட்களாக மூடைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடப்பற்றாக்குறையால் திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை எடை வைக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன் ஏற்பாட்டில் எடை வைக்கப்பட்ட நெல், லாரி மூலம் கோடவுனிற்கு கொண்டு செல்லப்பட்டது. குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் எடை வைக்க துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை