உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழநி மடம் நில மோசடி ஜாமின் மனு தள்ளுபடி

பழநி மடம் நில மோசடி ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பழநி டி.கே.என்.புதுார் சேதுபதி, திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் வெள்ளத்துரை பெயர்களில் ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கின்றனர். இதில் கைதான மடத்தின் அறங்காவலர் விழுப்புரம் சாலமேடு முருகதாஸ் ஜாமின் மனுவை ஆக.,31 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர்,‛கைதாகி 78 நாட்களாகிறது. சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,’ என மனு தாக்கல் செய்தார். நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !