உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐ.டி., விங்க் இளைஞர்களுடன் தனித்தனியே பேசிய பழனிசாமி; பூத் கமிட்டிகளை கண்காணிக்க உத்தரவு

ஐ.டி., விங்க் இளைஞர்களுடன் தனித்தனியே பேசிய பழனிசாமி; பூத் கமிட்டிகளை கண்காணிக்க உத்தரவு

மதுரை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், வெற்றிக்கு அடிப்படையாக உள்ள பூத் கமிட்டிகள் மீது ஓராண்டாகவே பழனி சாமி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அ.தி.மு.க.,வில் உள்ள 82 மாவட்டங்களில் இதற்கென பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இவர்கள் தலைமையில் ஒவ்வொரு பூத்திலும் 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை கண்காணிக்கவும், பூத் கமிட்டி செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் ஐ.டி. விங்க் சார்பில் ஒவ்வொரு பூத்திற்கும் தலா 3 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுடனும், பூத் பொறுப்பாளர்களுடனும் இரு நாட்களாக பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் ஐ.டி., விங்க் மாநில செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் இப்பிரிவின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 246 இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களிடம் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை தனித்தனியே பழனிசாமி பேசினார். 'அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கிக்கு பாலமாகவும், பலமாகவும் இருப்பது பூத்கமிட்டிகள்தான். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்கள், வாக்காளர்களை சந்திக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும். தி.மு.க.,வின் திருட்டு களும், உருட்டுகளும்' என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட கார்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து எவ்வளவு மதிப்பெண் போடுகிறார்கள் என குறித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து தி.மு.க.,வின் ஆட்சி அவலங்களை எடுத்துக்கூறி திண்ணை பிரசாரங்களில் ஈடுபடுங்கள்' என பழனிசாமி அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி