உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேவர் ஜெயந்தியில் பங்கேற்க அழைப்பு; பழனிசாமிக்கு உதயகுமார் ரத்த கையெழுத்து

தேவர் ஜெயந்தியில் பங்கேற்க அழைப்பு; பழனிசாமிக்கு உதயகுமார் ரத்த கையெழுத்து

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த கையெழுத்திட்டனர்.

மதுரையில் உதயகுமார் கூறியதாவது:

அக்.30 தேவர் குருபூஜையில் பழனிசாமி பங்கேற்கிறார். அவரை வரவேற்க பாண்டிய மண்டலம் தயாராகி வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.கருணாநிதி பேரன் என்பதற்காக உதயநிதி ஒரே ஆண்டில் துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். ஸ்டாலின் எம்.எல்.ஏ., பதவிக்கு வரும் போது பழனிசாமி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனவர். அவர் குறித்து பேசிய கருத்துக்களை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். பன்னீர்செல்வம் அறிக்கை கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தவர். துரோகத்தின் மொத்த வடிவமாக உள்ளார். அ.தி.மு.க., உடைய காரணமாக இருந்தார். கட்சியின் வெற்றிக்காக பாடுபடவில்லை. அவரது நடவடிக்கையால் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 1,96,000 ஓட்டுகளை இழந்தது. அ.தி.மு.க., வெற்றி பெறாமல் தொண்டர்கள் ரோட்டில் அலைய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். நம்பிச் சென்ற தொண்டர்களை பன்னீர்செல்வம் ஏமாற்றினார். சசிகலா, தினகரனை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். பின்னர் இருவரையும் ரகசியமாக சந்தித்தார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ