உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து உப கோயில்களில் பாலாலயம்

குன்றத்து உப கோயில்களில் பாலாலயம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்களான சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் கோயில், மலைக்கு பின்புறமுள்ள பால் சுனைகண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு நேற்று பாலாலயம் நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணி நடக்கிறது. முதற்கட்டமாக உபகோயில்களான சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில்களில் ஏப். 16ல் கும்பிஷேகம் நடந்தது.இரண்டாம் கட்டமாக சரவண பொய்கை ஆறுமுக நயினார் கோயில், மலைக்கு பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர். அதற்கான பாலாலயம் பூஜை நேற்று நடந்தது.மூலவர்களின் சக்தி புனித நீர் அடங்கிய கும்பங்களில் கலை இறக்கம் செய்து, ஆறுமுக நயினார் கோயிலில் வைத்து பாலாலய பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ரமேஷ், சொக்கு சுப்பிரமணியம் பூஜை செய்தனர். அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், துணை கமிஷனர் சூரிய நாராயணன் கலந்து கொண்டனர்.

சுவாமி மே 7ல் புறப்பாடு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளுடனும் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மே 7 மாலை 5:00 மணிக்கு புறப்பாடாகிறார்.மே 8 அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும்.பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று மே 10ல் மதுரை சுவாமிகளிடம், விடைபெற்று, மே 11ல் திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கம் போல் நடை திறப்பு, பூஜை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை