உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையை அகற்ற தவிக்கும் ஊராட்சிகள்

குப்பையை அகற்ற தவிக்கும் ஊராட்சிகள்

சோழவந்தான்: வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 ஊராட்சிகளில் போதுமான உபகரணங்கள் வழங்கப்படாததால் குப்பை முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. தேவையான தெருக்கூட்டுமாறு, கால்வாய் அடைப்பை அகற்ற உதவும் கரண்டி, கையுறைகள், தட்டு போன்றவை பற்றாக்குறையாக உள்ளன.கொரோனா பரவும் சூழலில் ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு இருப்பு இல்லை. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.பி.டி.ஓ., கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது, 'கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி