உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காகிதம் 1; ஜி.எஸ்.டி., வரிகள் 2 18க்கு பதிலாக 12 சதவீதம் விதிக்கவேண்டும்

காகிதம் 1; ஜி.எஸ்.டி., வரிகள் 2 18க்கு பதிலாக 12 சதவீதம் விதிக்கவேண்டும்

மதுரை: பேப்பரில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரி 18 சதவீதம் என்பதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என மதுரை நோட்புக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இச்சங்கத்தின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தலைவர் அழகு தலைமையில் நடந்தது. செயலாளர்கள் முருகேசன், பாலகிருஷ்ணன், பொருளாளர் நித்யானந்தம் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கூறியதாவது: மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் பேப்பர், நோட்புக்ஸ், அட்டைப்பெட்டிக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதேநேரம் பேப்பரில் தயாராகும் ரெஜிஸ்டர்கள், அக்கவுண்ட் நோட் புக்ஸ், டைரி, காலண்டர்கள், தேதி காலண்டர்கள், என்வலப், பைல், திருமண அழைப்பிதழ், வாழ்த்து அட்டைகள், பிரின்டட் மெட்டீரியல்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்கள் அனைத்தும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் என்பதோடு ஒரே பொருளில் தயாரிக்கப்பட்ட இருவேறு பொருட்களுக்கு 18 சதவீதம், 12 சதவீத வரி என்றுள்ளது. அனைத்து காகித தயாரிப்பு பொருட்களுக்கும் 12 சதவீத வரியாக மாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை தீர்மானமாக இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை